உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சத்திரம்: பூவாலை அங்காளம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

புதுச்சத்திரம் அடுத்த பூவாலை அங்காளம்மன் கோவிலில், மாதந்தோறும் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். இம்மாத ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

அதையொட்டி, மாலை 6.00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அலங்கரித்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !