உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் ஆனித் திருவிழா முகூர்த்தக்கால் நடல்

பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் ஆனித் திருவிழா முகூர்த்தக்கால் நடல்

பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் ஊன்றும் விழா கோலாகலமாக நடந்தது.

பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக் கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஜூன் 30 ல் சாட்டுதல் மற்றும் கம்பம் ஊன்றுதல், ஜூலை 6ல் கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா துவங்குகிறது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அம்மன் ரிஷபம், குதிரை, சிம்மம், யானை, அன்னப்பட்சி உட்பட பல்வேறு வாகனத்தில் வீதி உலா வருவார். முக்கிய திருவிழாவான 9 ம் நாள் ஜூலை 14ல் மாவிளக்கு, ரத உற்சவமும், மறுநாள் 10 ம் நாள் ஜூலை 15ல் அக்னிச்சட்டி திருவிழாவும், ஜூலை 21ல் மறுபூஜை நடக்கிறது. நேற்றைய விழாவில் திருப்பணிக்குழுவினர் சிதம்பரசூரியவேலு, செயல் அலுவலர் சுந்தரி, பூஜாரிகள் காமுத்துரை பாண்டியன், செல்வப்பாண்டியன்,மண்டகப்படிதாரர்கள் கண்ணன், வீரமணி, முத்து, அண்ணாமலை, சிவக்குமார், அய்யாச்சாமி, ராஜவேலு உள்பட பலர் பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !