உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லை மாரியம்மன், நாகம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

எல்லை மாரியம்மன், நாகம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

செம்பட்டி; ஆத்தூர் கோழிப்பண்ணை விலக்கு விநாயகர், சமயபுரத்து எல்லை மாரியம்மன், நாகம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், தீர்த்தம் அழைப்பு, புண்யாகவாஜனம், மகா சாந்தி ஹோமம், கலச ஸ்தாபனம், அங்க, உத்தர வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை, ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !