ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜருக்கு ஆனி திருவாதிரை திருமஞ்சனம்
ADDED :8 hours ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், ஆனி மாத திருவாதிரையொட்டி, ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் வீதியுலா புறப்பாடு நேற்று நடந்தது.
வைணவ மகான் ராமானுஜரின் அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆனி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், அங்க்ரர்ஷணம், திரு வாராதனம் தீர்த்தம் உள்ளிட்டவை நடந்தது. காலை 11:30 மணிக்கு, ராமானுஜருக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு குளக்கரை வீதியுலா புறப்பாடு சென்று, ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.