புதுச்சேரி தேவி நாகவள்ளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
புதுச்சேரி: திப்புராயப்பேட்டையில் தேவி நாகவள்ளியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, எஜமான் சங்கல்பம், மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலை வாஸ்து சாந்தி, பிரவேசப் பூஜை, அங்குரார்பணம், ரக் ஷாபந்தனம், கலச ஸ்தாபனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை இரண்டாம் யாகசாலை பூஜை, தத்தவார்சனை நாடிசந்தானம், யாத்ராதானம், கடம் புறப்பாடு, பாலவிநாயகர், பாலமுருகன், தேவி நாகவள்ளியம்மன் சுவாமிக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிேஷகம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு தேவி நாகவள்ளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.