உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் தேவாலயத்தில் முப்பெரும் விழா

மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் தேவாலயத்தில் முப்பெரும் விழா

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் தேவாலயத்தில், நாளை முப்பெரும் விழா நடைபெற உள்ளது.


மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில், அந்தோணியார் தேர்த்திருவிழா, 14ம் கொடியேற்றத்துடன் துவங்கியது. 19ம் தேதி வரை, மாலையில் நவநாள் திருப்பலி, ஆராதனை, மறையுரை ஆகியவற்றை ராபர்ட், சேவியர் கிளாடிஸ், செபாஸ்டியன் மரிய சுந்தரம், இம்மானுவேல் ஆகிய பாதிரியார்கள் நிறைவேற்றினர். நாளை, 21ம் தேதி புதுப்பிக்கப்பட்ட தேவாலயம் அர்ச்சிப்பு, சிறுவர்களுக்கு அருட்சாதனங்கள் வழங்குதல், அந்தோணியார் தேர்த்திருவிழா என, முப்பெரும் விழா நடைபெற உள்ளது. கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் பங்கேற்று, புதிய தேவாலயத்தை அர்ச்சிப்பு செய்ய உள்ளார். அவருக்கு காலை, 7:30 மணிக்கு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, ஆயர் சிறப்பு கூட்டுப் பாடற் திருப்பலியை நிறைவேற்றி, சிறுவர்களுக்கு புதுநன்மை, உறுதிப்பூசல் அருட்சாதனங்கள் வழங்க உள்ளார். மாலை, 5:45 மணிக்கு தேர்த்திருவிழா சிறப்புத் திருப்பலி, கோவை மறைமாவட்ட பொருளர் ஆண்டனி செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திரளான பங்கு பாதிரியார்கள் பங்கு பெற உள்ளனர். அதைத் தொடர்ந்து மாலை, 7:30 மணிக்கு புனித அந்தோணியார் ஆடம்பரத் தேர் பவனி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் பிலிப் மற்றும் பக்த சபையினர், பங்கு மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !