உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் மஹாலக்ஷ்மி தீபோத்ஸவம்; பக்தர்கள் பரவசம்

திருப்பதியில் மஹாலக்ஷ்மி தீபோத்ஸவம்; பக்தர்கள் பரவசம்

திருப்பதி: செழிப்பு மற்றும் தெய்வீக அருளின் அடையாளமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி தீபோத்ஸவம் திருப்பதியில் பக்திபூர்வமாகக் கொண்டாடப்பட்டது. 


 திருப்பதி, ஸ்ரீ ராமச்சந்திர புஷ்கரிணியில் சர்வ ஐஸ்வர்யம், ஆரோக்கியம், மற்றும் குடும்ப மகிழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றிணைந்து தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற இந்த தீப பூஜையின்போது, ​​ஸ்ரீ ராமச்சந்திர புஷ்கரணி பகுதி கோவிந்த நாம சங்கீர்த்தன முழக்கங்களால் நிறைந்து காணப்பட்டது.  இதனை தொடர்ந்து, இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை இந்த மஹாலக்ஷ்மி தீப பூஜை வெவ்வேறு இடங்களில் நடத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !