உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் பிரசாத லட்டு விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் : அமைச்சர் மதன்ராஜ்

ராமேஸ்வரம் கோயில் பிரசாத லட்டு விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் : அமைச்சர் மதன்ராஜ்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரசாத லட்டு விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுகுறு தொழில் வளர்ச்சி அமைச்சர் மதன்ராஜ் தெரிவித்தார்.


இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து அமைச்சர் மதன்ராஜை, கலெக்டர் சிவகுருபிரபாகரன், கோயில் இணைஆணையர் செல்லதுரை வரவேற்றனர். பின் அமைச்சர் சுவாமி, சன்னதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் நீராடும் வழித்தடம், பிரகாரத்தில் நடக்கும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.


பின் அமைச்சர் கூறியதாவது : ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுபாடு முக்கிய பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும், மேலும் அடிப்படை பிரச்சினைகள் என்னென்ன உள்ளது என்பதை ஆய்வு செய்து விரைவில் அதற்கான திட்டங்களை அமல்படுத்திட மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான படித்த இளைஞர்கள் உள்ளனர். இங்கு எந்த தொழிலை உருவாக்கினால் சிறப்பாக அமையும் என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளோம். ராமேஸ்வரம் கோயிலில் பிரசாத லட்டு விற்பனை மோசடி விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களின் முடியை சேகரிப்பவர்களின் சம்பள உயர்வு குறித்தும் பரிசீலனை செய்ய ஹிந்து அறநிலைதுறைக்கு பரிந்துரைக்கப்படும் என்றார் முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அன்னதானத்தை ஆய்வு செய்து அங்கு பக்தர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். இதில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன், கோயில் அதிகாரிகள், பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !