சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை
ADDED :1 days ago
சிதம்பரம்: மாணிக்கவாசகர் குருபூஜை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம், வேங்கான் தெருவில் அமைந்துள்ள ஆத்மநாதர் கோவிலில் இன்று மாணிக்கவாசகர் குருபூஜை வழிபாடு நடந்தது. இதில், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் செய்து வழிபட்டனர்.முன்னதாக சிவபூஜை வழிபாடு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் மற்றும் யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது.