மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
ADDED :5 hours ago
மூணாறு; மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூன்24) நடக்கிறது.
இந்த கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கவில்லை. கோயில் புனரமைக்கப்பட்டு புது பொலிவுடன் காணப்படும் நிலையில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7:45 மணி முதல் 11:00 மணிக்குள் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, சிவன், அய்யப்பன், நாகராஜா, தட்சிணாமூர்த்தி, துர்கை அம்மன் ஆகியோருக்கு தேவன் கிருஷ்ணன் நம்பூதிரி, நாராயணன் நம்பூதிரி ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். கும்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளும், அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாக்கான ஏற்பாடுகளை இந்து தேவஸ்தானம் முக்கியஸ்தர்கள் செய்தனர்.