புதுச்சத்திரம் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த வாண்டியாம்பள்ளம் விநாயகர் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடந்தது.
விழா கடந்த 22 ம் தேதி காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், வருண பூஜை, கலச பூஜை, புதிய சிலைகள் கரிக்கோலம் வருதல் நடந்தது. மாலை 6.00 மணிக்கு வாஸ்து பூஜை, பிரவேச பலி, முதற்காலையாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 23 ம் தேதி காலை 6.30 மணிக்கு இரண்டாம் காலையாக பூஜை, வேத பாராயணம், பூர்ணாஹூதி தீபாராதனை. மாலை 6.00 மணிக்கு மூன்றாம் காலையாக பூஜை, மந்ரோபச்சாரம், தீபாராதனை, சிலைகள் மற்றும் கோபுர கலசங்களுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. இன்று 24 ம் தேதி காலை 6.00 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, நாடி சந்தானம், திரவியாஹுதி, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 9.30 மணிக்கு கலசம் புறப்பாடு செய்து, 10.00 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.