உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகிய நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்

திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகிய நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்

திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடந்தது.

திருப்பாச்சேத்தி சிவாலயம் திருமாலும், திருமகளும் வழிபட்ட ஸ்தலமாகும், இருபக்க சுவாநம் கொண்ட ஸ்ரீகஷ்ட நிவாரண பைரவர் அருள்புரியும் ஸ்தலமாகும், கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்தன. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 18ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 19ம் தேதிகணபதி ஹோமமும், சனிக்கிழமை நவகிரக ஹோமும், திங்கள்கிழமை 3ம் கால யாகசாலை பூஜையும், செவ்வாய் கிழமை 4ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

இன்று அதிகாலை 4 :00 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. காலை ஆறு மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சார்யர்கள் சுமந்து ஊர்வலமாக வந்தனர். காலை 6:50 முதல் 7:25 மணிக்குள் பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ பிச்சை குருக்கள், பெரியகோட்டை மீனாட்சி சுந்தரகுருக்கள் கலசத்தில் புனித நீர் ஊற்றி நடத்தி வைத்தனர். மாலை ஆறு மணிக்கு திருக்கல்யாண உற்சவமும, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவை ஒட்டி அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !