உடுமலை வேங்கடேச பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
ADDED :8 hours ago
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நடந்தது.
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா மற்றும் மகா சுதர்சன ஹோமம், சிறப்பு திருமஞ்சன விழா, கடந்த, 25ம் தேதி, விஸ்வக்சேன ஆராதனையுடன் துவங்கியது. 23ம் தேதி, மகா கும்பஸ்தாபனம், ஹோம பூஜைகள் நடந்தன. இன்று காலை, 7:00 மணிக்கு, ஹோம பூஜை, மகா வேள்வி நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, சக்கரத்தாழ்வாருக்கு நவ கலச விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.