போடிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1 hours ago
வாடிப்பட்டி; போடிநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன்.,23ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 2ம் காலயாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். எம்எல்ஏ கருப்பையா பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் த.வெ.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் தியாகராஜன், தாமு, பசுமணி, நிர்வாகிகள் கணேசன், திருப்பதி, அம்பேத்குமார், மகளிரணி உமாலட்சுமி, அலமேலு பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை காளியம்மன் கோயில் தெரு மக்கள் செய்திருந்தனர்.