செங்குண்ட அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
ADDED :4 hours ago
மேலூர்; அ.வல்லாளபட்டியில் செங்குண்ட அய்யனார் கோயில் ஆனி மாத புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மே 30 பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜூன் 22 சாமிகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து வல்லாளப்பட்டி தெற்குவளவு மந்தையில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள கல்லம்பட்டி செங்குண்ட அய்யனார் கோயிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.