உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் வைபவம்

சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் வைபவம்

அன்னூர்: வடுகபாளையம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவில் இன்று கத்தி போடும் வைபவம் நடந்தது.


நாரணாபுரம் ஊராட்சி, வடுக பாளையத்தில் உள்ள மாரியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில், திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா இன்று துவங்கியது. இன்று காலை 10:00 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் சவுடேஸ்வரி அம்மனை வணங்கி, கத்தி போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதையடுத்து, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் சப்பரத்தில் கொலு வைக்கப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (2ம் தேதி) காலை விநாயகர் ஹோமமும், மாலையில் முளைப்பாலிகை ஊர்வலமும் நடைபெறுகிறது. 3ம் தேதி காலை கோபுரம் கண் திறத்தலும், மாலையில் முதற்கால வேள்வி பூஜையும், சங்கமம் நாட்டுப்புற கலைக்குழுவின் ஒயிலாட்டம் மற்றும் கம்பத்தாட்டமும் நடைபெறுகிறது. வரும், 4ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், இரவு 7:00 மணிக்கு பழனி ஆண்டவர் காவடி குழுவின் காவடியாட்டமும், ஜமாப்பும் நடைபெறுகிறது. வருகிற, 5ம் தேதி காலை 7:00 மணிக்கு, மாரியம்மன் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து, மகா அபிஷேகம், தச தரிசனம் நடைபெறுகிறது. மதியம் திருக்கல்யாண உற்சவமும், இரவு தேவாரத் திருமுறை திருப்புகழ் பண்ணிசை நிகழ்ச்சியும், நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !