விழுப்புரம் கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED :4 hours ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா இன்று நடந்தது. அதனையொட்டி, காலை 9:00 மணிக்கு துவங்கி மூலவர், உற்சவர் கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குளக்கரையிலிருந்து பூங்கரகம் ஊர்வலம் வந்தது. மதியம் 1:30 மணிக்கு கூழ்குடங்களுடன் வந்த பக்தர்கள், அம்மனுக்கு கூழ் படைத்து, மகா தீபாராதனையுடன் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு உற்சவர் கெங்கை அம்மனுக்கு காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.