கண்ணகப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED :1 days ago
திருப்போரூர்; கண்ணகப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணகப்பட்டில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் 17ம் தேதி அக்னி வசந்த உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கமும் , தீபாராதனைகளும் இரவில் திருவீதியுலாவும் நடந்தது. மேலும், கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவும், இரவில் பாரதகூத்தும் நடந்தது. நேற்று துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் , தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.