புதுப்பட்டினம் புனித ஆசிர்வாதப்பர் சர்ச் தேர்பவனி
ADDED :1 days ago
தொண்டி: தொண்டி அருகே புதுப்பட்டினம் சின்னமடம் தோப்பு புனித ஆசிர்வாதப்பர் சர்ச் திருவிழா நடந்தது. முக்கிய விழாவாக நேற்று முன்தினம் இரவு தேர் பவனி நடந்தது. முன்னதாக பாதிரியார்கள் செல்வராஜ், பாக்கியராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட தேர்பவனி வந்தது. நேற்று கொடியிறக்கம் நடந்தது.