புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
ADDED :13 hours ago
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 10:00 மணியளவில், உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5:00 மணியளவில், மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், 5:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.