உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜருக்கு 40 லட்சம் மதிப்பில் சிரகபாலகவஜம் வழங்கிய பக்தர்

சிதம்பரம் நடராஜருக்கு 40 லட்சம் மதிப்பில் சிரகபாலகவஜம் வழங்கிய பக்தர்

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயில் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு பக்தர் ஒருவர் வழங்கிய 40 லட்சம் மதிப்பிலான சிரசுபால கவஜம் நேற்று அணிவிக்கப்பட்டது.

கர்நாடகாவைச் சேர்ந்தவர், சுரேஷ்பாபு- கிரிஜா தம்பதியினர், கடலூர் மாவட்டம் , சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைந்துள்ள, ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு "சிரசுபாலகவஜம், காணிக்கையாக வழங்கினர், 40 லட்சம் மதிப்பிலான, 380 கிராம் தங்கத்தில், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிரசுபாலகவஜத்தை, கட்டளை தீட்சிதரான தனசேகர தீட்சிதர் மூலம், கோயில் கமிட்டி செயலாளர் ஜெயசூர்யா தீட்சிதரிடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !