பழநி முருகன் கோயிலில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்
பழநி; பழநி முருகன் கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று தரிசனம் செய்தார். தனியார் மடத்தில் பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார்
பழநிக்கு ஜூலை 13, இரவு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்தார். அவருக்கு தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்தைய்யர் பூரண கும்ப மரியாதை உடன் வரவேற்றார். பழநி அடிவாரம் அருள்ஜோதி வீதியில் உள்ள தனியார் மஹாலில் சுவாமிகள் தங்கினார். அங்கு தனியார் மட உரிமையாளர் வைத்தியநாதன்,பழநி கோயில் குருக்கள் செல்வ சுப்பிரமணி, விஷ்வ ஹிந்து பரிஷத் தென் மாநில தலைவர் ராமகிருஷ்ணன், திருக்கோயில்கள் திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார், ஹிந்து வியாபாரிகள் நல சங்க மாநிலத் செயலாளர் ஜெகன், மற்றும் பக்தர்கள் வரவேற்றனர்.
இன்று (ஜூலை 14) பழநி முருகன் கோயிலுக்கு சிறுகால சந்தி பூஜையில் பங்கேற்க வருகை புரிந்தார். கோயில் இணை கமிஷனர் வெங்கடேஷ் கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தி வரவேற்றார். தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்தைய்யர் உடன் இருந்தார். அர்த்த மண்டபத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நின்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின் அருள்ஜோதி வீதியில் தனியார் மடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சங்கராலயத்திற்கு விஜயம் செய்தார் அங்கு பாலசுப்ரமணியம், சிவக்குமார் ஆசி பெற்றனர். கோசாலையை பார்வையிட்டார். ஸ்ரீ தண்டபாணி தேவஸ்தான அஷ்டக ஸ்தானிகர் சங்கத்திற்கு விஜயம் செய்த சுவாமிகளை சங்கத் தலைவர் கும்பேஸ்வர குருக்கள் வரவேற்றார். அதன் பின் கோவை சாலையில் உள்ள வன்னி விநாயகர் கோவிலுக்கு சென்றார் அங்கு சுந்தரேச குருக்கள் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின் பொள்ளாச்சிக்கு பயணத்தை தொடர்ந்தார்.