தேவி கருமாரி அம்மன் கோயில் ஆனித் திருவிழா
ADDED :1 days ago
தேவகோட்டை; தேவகோட்டை தேவி கருமாரி அம்மன் கோயில் ஆனித் திருவிழா கடந்த ஏழாம் தேதி கணபதி ஹோமம் , காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சங்காபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி வேல் காவடி எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். மாலையில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து அம்மன் சந்நிதியை அடைந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து தேவி கருமாரி அம்மனுக்கு பூச்சொரிதல் செய்து வழிபட்டனர். திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.