ஆடி இரண்டாம் வெள்ளி; உடுமலை மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :15 hours ago
உடுமலை; ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், நுாற்றாண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி மாதம் அம்மனுக்கு பிடித்த மாதமாகும், இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை என்பதால் உடுமலை மாரியம்மன் அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளினார். காலை, 11:00 மணிக்கு திருமஞ்சனம், உச்சிக்கால பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பெண்கள் அம்மனை விளக்கேற்றி வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.