ராம நாமம் சொன்னால் சகல கஷ்டமும் தீரும்
ADDED :14 hours ago
கோவை: ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில், நவக்கிரஹ தோஷம் நீங்க நடத்தும் ஆன்மிக சொற்பொழிவில் காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி ஸ்ரீ கல்யாணராமன் பேசியதாவது:
ஸ்ரீமந்நாரயணன் தர்மத்தை நிலைநாட்ட அவதாரம் செய்தார். தர்மத்தை நிலைநாட்டும் போது அதர்மம் தானாக அழிந்துவிடும். ராமநாமத்தை சொன்னால் சகல கஷ்டங்களும் தீரும். ராமநாமத்தை சொல்வதால் ஒரே நேரத்தில் சிவனின் நாமம், நாராயணனின் நாமம் உச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று ‘விஸ்வாமித்திரருக்கு வேள்வி காத்தல்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். வரும் ஆக.,2 வரை தினமும் மாலை 6:30 முதல் 8:30 மணி வரை சொற்பொழிவு நடக்கும். பக்தர்கள் பங்கேற்க கோயில் அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.