உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சடையுடையார் சாஸ்தா கோயில் ஆடி மாத கொடை விழா

சடையுடையார் சாஸ்தா கோயில் ஆடி மாத கொடை விழா

ராஜபாளையம்: ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவில் சடையுடையார் சாஸ்தா கோயில் ஆடி மாத கொடை விழா நடந்தது.

இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாக பூஜை, தீர்த்த குடம், பால்குடங்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு மூலவர் சடையுடையார் சாஸ்தா, பூர்ணா, புன்னைவனத்தாய் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் இருளப்பசாமி அழைப்பு தொடர்ந்து பூஜாரி மாடசாமி பிள்ளை குருபூஜை நடந்தது.

மூலவருக்கு சந்தன அலங்காரத்திற்கு பின் அதிகாலை 12:00 மணிக்கு சங்கிலி மாடசாமி சுடலை மாடசாமி மயான வேட்டைக்கு சென்று கோயில் வந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். சுற்றுப்பகுதி திரளான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !