உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோவிலில் கைலாச கிரி பிரதட்சிணம்; பக்தர்கள் கிரிவலம்

காளஹஸ்தி சிவன் கோவிலில் கைலாச கிரி பிரதட்சிணம்; பக்தர்கள் கிரிவலம்

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் மாதந்தோறும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கைலாச கிரி பிரதட்சிணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் வலம் வந்து அருள்பாலித்தனர். பக்தர்களின் வசதிக்காக  கோயில் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, நேற்ற மாலை 7.00 மணிக்கு சிவன் கோயில் அருகில் சன்னதி வீதியில் உள்ள ஜல விநாயக சுவாமி,  கோயிலின் 3-வது நுழைவாயில் கோபுரம் அருகில் இருந்து 2 இலவசப் பேருந்துகள் கிரிவலம் செல்ல பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜல விநாயகர் கோயில் அருகில் இருந்து சுமார் பதினாறு கி.மீ. தூரம் கிரிவலப் பாதையில் கைலாச மலைகளைக் சுற்றி பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர். மேலும், இரவு 8.30 மணி முதல் 10.30 மணி வரை கிரிவலப் பாதையில் உள்ள அஞ்சூரு மண்டபத்தில் பக்தர்களுக்கு இலவச இரவு உணவு ( சிற்றுண்டி) மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.கிரி பிரதட்சிணத்திற்கு வரும் பக்தர்கள், கோயிலால் வழங்கப்படும் இந்த இலவசப் பேருந்து வசதி மற்றும் அன்னபிரசாதம் வழங்கும் சேவைகளைப் பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !