உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை பாரதீய வைதீக மகாஜன சபா சார்பில் வியாச பூர்ணிமா மகோத்சவம்

கோவை பாரதீய வைதீக மகாஜன சபா சார்பில் வியாச பூர்ணிமா மகோத்சவம்

கோவை; பாரதீய வைதீக மகாஜன சபா சார்பில் முதன் முதலாக கோவையில் வியாச பூர்ணிமா மகோத்சவம் நிகழ்ச்சி கோவை பேரூர் வைதீகாள் மடத்தில் நடந்தது சனாதன தர்மத்தின் ஆணிவேராக விளங்கும் வேதங்களையும் அந்த வேதங்களைக் காக்கும் வித்வான்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேதம் சாஸ்திரம் பாரம்பரியம் தர்மம் இவற்றின் நிலையான வளர்ச்சிக்காக இந்த நிகழ்வு நடந்தது இதன் முதல் நிகழ்வாக காலை 7 மணி அளவில் குரு வந்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து வியாச பூஜை அடுத்ததாக வாகை வாரம் பதவாரம் ஆகிய நடைபெற்றது இரவு 7:00 மணிக்கு மந்திர புஷ்பம் மகா தீபாராதனை நடைபெறும் இந்த நிகழ்விற்காக கோவை திருப்பூர் ஈரோடு கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள வேதபாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வியாசர் படத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு பூக்களால் அர்ச்சனை நடைபெற்றது இந்த நிகழ்வானது வேத பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு என்று வேத பண்டிதர்கள் கூறினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நமது கலாச்சாரம் சம்பிரதாயத்தை நிலை நிறுத்த இந்த நிகழ்வு நடந்ததாக விழா குழுவினர் தெரிவித்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !