உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சியில் வியாச பூஜை; ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கிய சங்கராச்சாரியார்கள்

காஞ்சியில் வியாச பூஜை; ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கிய சங்கராச்சாரியார்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணிமண்டப வளாகத்தில் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கினர்.


இந்த ஆண்டுக்கான வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதங்கள் இன்று 29ம் தேதி துவங்கி வரும் செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு இன்று ஓரிக்கையில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் பூஜா மண்டபத்தில் இந்த விரத வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் சந்திரமவுலீஸ்வர பூஜையிடன் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கினார்கள். இதில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று, சந்திரமவுலீஸ்வர சுவாமி மற்றும் காஞ்சி குருநாதர்களின் ஆசிகளை பெற்று வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !