உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னீஸ்வரர் கோவில் தல புராணம் வெளியிட முடிவு

மன்னீஸ்வரர் கோவில் தல புராணம் வெளியிட முடிவு

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், பல கோடி ரூபாய் செலவில், தங்க தேர் உருவாக்கப்பட்டு கடந்த பிப்., முதல் ஒவ்வொரு மாதமும் கிருத்திகையன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

திருப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.

அறங்காவலர்கள் கணேசமூர்த்தி, சங்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கோவிலின் மேற்கு வாசலில் அலங்கார முகப்பு அமைத்தல், தங்கத்தேர் ஸ்ட்ராங் ரூம் கட்டும் பணியை விரைவாக முடித்து திறப்பு விழா நடத்துதல். கோவில் தலபுராணம் அச்சடித்து வெளியிடுதல் ஆகிய பணிகள் செய்ய முடிவெடுக்கப் பட்டது.

திருப்பணிகள் குறித்த வரவு செலவு வாசிக்கப்பட்டது. பக்தர்கள் சிலர் பேசுகையில், ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று தங்க தேரோட்டம் நடத்த வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் கூடுதலாக பார்க்கிங் வசதி செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில், முன்னாள் ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், முன்னாள் தலைவர் சவுந்தரராஜன், லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !