மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி துாய்மைப் பணி: கமிஷனர் உத்தரவு
மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தைச் சுற்றி எப்போதும் துாய்மையாக வைத்திருக்க அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார் உத்தரவிட்டார்.
தெப்பக்குளம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஆரோக்கியம், சுகாதாரமான சாலையோர உணவகங்களின் தொகுப்பு திட்டத்தின் கீழ், உணவகங்கள் அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து நேற்று பார்வையிட்டார். உணவு கழிவுகளை கொட்டப்படுவதை சுட்டிக்காட்டி அதை உடன் அகற்ற உத்தரவிட்டார். கழிவுகளை குப்பை தொட்டிகளில் கொட்ட உரிமையாளர்களை அறிவுறுத்தினார். சுற்றுலா பகுதி என்பதால் துாய்மையாக வைத்துக்கொள்ளவும் உத்தரவிட்டார். சுகாதாரக் கேட்டை விளைவித்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சிவராம பாண்டியன், மீனாட்சி கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை, உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார், மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அபிஷேக், பி.ஆர்.ஓ., விஜயகுமார் பங்கேற்றனர்.