உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 79ம் ஆண்டு ஆடி மாத ஆன்மிக உபன்யாச மஹோத்ஸவம்

79ம் ஆண்டு ஆடி மாத ஆன்மிக உபன்யாச மஹோத்ஸவம்

உடுமலை: உடுமலை ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை சபாவின், 79ம் ஆண்டு ஆடி மாத ஆன்மிக உபன்யாச உற்சவத்தையொட்டி, ராமய்யர் திருமண மண்டபத்தில் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

உற்சவத்தின் முதல் நாளில், வேங்கடேஷ் சுவாமிகள், ‘கஜேந்திர மோட்சம்’ என்ற தலைப்பில் பக்தி, தத்துவம் மற்றும் ஆன்மிக நெறிகளை எடுத்துரைக்கும் வகையில், சொற்பொழிவாற்றினார்.

இந்த ஆன்மிக நிகழ்வில், பெருந்திரளான பக்தர்கள் மற்றும் அன்பர்கள் சுவாமிகளின் ஆழ்ந்த ஆன்மிக சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தனர்.

இன்று, (29ம் தேதி) ‘அனுமன் பெருமை’ என்ற தலைப்பில், வேங்கடேஷ் சுவாமிகள் பேசுகிறார். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து, வரும் 30ம் தேதி முதல், ஆகஸ்டு 2ம் தேதி வரை, ‘ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் முத்துக்கள்’ என்ற தலைப்பில், வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் சுவாமிகள் சொற்பொழிவாற்றுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !