சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
ADDED :6 hours ago
சூலூர்: ஆடி வெளியை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
ஆடி மாத மூன்றாவது வெள்ளிக் கிழமையை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பொன்னாண்டாம்பாளையம் அங்காளம்மன் கோவில், அப்பநாயக் கன்பட்டி சக்தி மாரியம்மன், ராமாச்சியம்பாளையம், செங்கத்துறை, பாப்பம்பட்டி மாகாளியம்மன், ரங்கநாதபுரம் தங்கமுத்து மாரியம்மன், சூலூர் மேற்கு அங்காளம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நேற்று நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.