உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாயி அம்மனை வழிபட்டால் தைரியம் கிடைக்கும்

பெரியாயி அம்மனை வழிபட்டால் தைரியம் கிடைக்கும்

தைரியம் வேண்டுமா... கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம்
மணிமுத்தாற்றங்கரையில் உள்ள சித்தலுார் பெரியாயி அம்மனை
தரிசிப்போம்.

இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் கனவில் அம்மன் தோன்றினாள்.
குறிப்பிட்ட கிணற்றில் நான் இருக்கிறேன். என்னை எடுத்து வழிபடு
என உத்தரவிட்டாள்.

மன்னரும் அந்தச் சிலையை எடுத்து அம்மனுக்கு கோயில் கட்டினார். உலகிற்கு அதிபதி அம்பிகை என்பதால்  ‘பெரியாயி’ (பெரியவள்) என பெயர் பெற்றாள். இவளுக்கு பெரிய நாயகி என்றும் பெயருண்டு.  

இங்கு நடக்கும் மாசிமாத தேரோட்டமும், மயானக் கொள்ளை விழாவும்  பிரபலமானவை. இப்பகுதி மக்களுக்கு பெரியாயி அம்மனே குலதெய்வமாக திகழ்கிறாள். இங்கு வருவோருக்கு தைரியம் அதிகரிக்கும்.

எப்படி செல்வது: கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் 8 கி.மீ., அங்கிருந்து சித்தலுார் 9 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – மாலை 6:00 மணி
தொடர்புக்கு: 97515 55363


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !