உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு; பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஏராளமானோர் வழிபாடு

ஆடிப்பெருக்கு; பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஏராளமானோர் வழிபாடு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர் தொடர்ந்து இறந்த தங்கள் குழந்தைகள் மற்றும் முன்னோர்களுக்காக ஆற்றங்கரையில் கல் பதித்து அதற்கு படையல் வைத்து வழிபட்டனர் ஆற்றங்கரை அருகே அமைந்துள்ள ஆற்று விநாயகர் கோவிலில் பொதுமக்கள் தங்கள் குடும்ப நலன் வேண்டி வழிபட்டு பசு மாடுகளுக்கு அகத்திகீரை கொடுத்தும் காகங்களுக்கு உணவளித்து ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்தும் வழிபட்டு சென்றனர் பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் தண்ணீர் இல்லாததால் கோவில் நிர்வாகம் சார்பில் குழாய் பதிக்கப்பட்டு ஷவர் முறையில் அமைத்திருந்தனர். இந்த நிகழ்வுகளுக்காக கோவை பொள்ளாச்சி திருப்பூர் உடுமலை மேட்டுப்பாளையம் அவிநாசி கேரளா எல்லை பகுதி ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !