உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் தேரடி விநாயகர் கோவிலில் 41ம் ஆண்டு விழா

திருக்கோவிலூர் தேரடி விநாயகர் கோவிலில் 41ம் ஆண்டு விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகர்க்கு 41ம் ஆண்டு சந்தன காப்பு விழா நடந்தது.


திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 41ம் ஆண்டு சந்தன காப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகா அபிஷேகம், சோடசோபோவுபசார தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் அலங்காரத்தில் மகாதீபாராதனை, நாதஸ்வர தவில் இன்னிசை கச்சேரி, தொடர்ந்து உற்சவர் விநாயகர் வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேரடி விநாயகர் இளைஞர் குழுவினர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !