திண்டுக்கல் மாவட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில், 80 அடி ரோடு வெக்காளியம்மன் கோயில் ரோடு உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த னர்.
ஒட்டன்சத்திரம்: விருப்பாட்சி தலையூற்று நாக விசாலாட்சி அம்பிகா மற்றும் ஸ்ரீநல்காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தங்கச்சியம்மாபட்டி கரை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. கே.அத்திக்கோம்பை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. குழந்தை வேலப்பர் கோயிலில் வேலப்பருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. எஸ்.அத்திக்கோம்பை உச்சிமாகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. ஒட்டன்சத்திரம் ரத்தினகிரீஸ்வரர் ஆலயம் ஸ்ரீ வாராகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், 108 அஷ்டோத்திரங்களுடன் தீபாராதனை, பூஜைகள் சிறப்பாக நடந்தன.
ஆத்துார்: அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மலர் அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவற்றை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் பொங்கல் வழிபாடு, கிடா பலியிடல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவிலில் திருமஞ்சன அபிஷேகத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது.
யோக ஆஞ்சநேயர், போகர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசேஷ ஆராதனைகள் நடந்தது.
ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி கதிர் நர சிங்க பெருமாள் கோயிலில், கமலவல்லி சமேத கதிர் நரசிங்க பெருமாளுக்கு, திரவிய அபிஷேகத்துடன், துளசி மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வீர ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றுதலுடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் அன்னதானம், ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
கொடைக்கானல்: குறிஞ்சியாண்டவர், குழந்தை வேலப்பர், வில்பட்டி வெற்றிவேலப்பர், பெரிய மாரியம்மன், தாண்டிக்குடி பாலமுருகன், கானல்காடு பூதநாச்சியம்மன், பண்ணைக்காடு மயான காளியம்மன், டெப்போ காளியம்மன், மலைப் பகுதியில் உள்ள குல தெய்வ கோயில்களில் வழிபாடு நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நத்தம்: காந்தி நகர் சமயபுரத்தாள், மலையம்மாள் கோயிலில் ஆடிப்படையல் விழா நடந்தது. இதில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கிடாய்கள் வெட்டப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.