உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை விமரிசை

திருப்போரூர் அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை விமரிசை

திருப்போரூர்: திருப்போரூர் அய்யப்பன் கோவிலில், ஆடிமாதத்தை முன்னிட்டு, 21ம் ஆண்டு விளக்கு பூஜை விமரிசையாக நடந்தது.


திருப்போரூர் – ஓ.எம்.ஆர்., சாலையையொட்டி அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவிகருமாரி அம்மன் சன்னதியும் அமைந்து உள்ளது. ஆடிமாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு, நேற்று முன்தினம் இரவு விளக்கு பூஜை நடந்தது. இதில், திருப்போரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்குகள் ஏற்றி அம்மனுக்கு பூஜை செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !