கோவை மாகளியம்மன் கோவிலில் 500 கிலோ நவதானியத்தினால் ராகு கேது அலங்காரம்
ADDED :2 days ago
கோவை; கோவை, பெரியகடை வீதி மாகளியம்மன் கோவிலில் 500 கிலோ நவதானியத்தினால் ராகு கேது அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது; பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையான இன்று கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உட்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. பெரியகடை வீதி மாகாளியம்மன் கோவிலில், 500 கிலோ நவதானியத்தினால் ராகு கேது அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.