உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளந்தை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்; திரளான பக்தர்கள் தரிசனம்

விளந்தை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்; திரளான பக்தர்கள் தரிசனம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


திருக்கோவிலூர் அடுத்த விளந்தையில் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. ஆடி மாதம், முதல் வெள்ளிக் கிழமையான கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று செடல் உற்சவம் நடந்தது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வேண்டுதல் உள்ள பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மாலை தென்பெண்ணை ஆற்றில் கரகம் ஜோடிக்கப்பட்டு, பக்தர்கள் அலகு குத்தி, ஊர்வலமாக புறப்பட்டனர். கோவிலை அடைந்தவுடன் சிறப்பு நிகழ்ச்சியாக ஆட்டு கிடாயை செடலில் ஏற்றி சுற்றிவரும் வைபவம் நடந்தது. விழாவில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !