ராமேஸ்வரத்தில் தங்கப்பல்லக்கில் அம்மன் உலா
ADDED :7 hours ago
ராமேஸ்வரம்: ஆடித் திருக்கல்யாணம் விழாவுக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆக., 5ல் கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது.
5ம் நாள் விழாவான நேற்றுமுன் தினம் காலை கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி அலங்கரிக்கப்பட்ட தங்கப் பல்லக்கில் எழுந்தருளினார். பின் கோயில் நான்கு ரதவீதியில் உலா வந்தார். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆக.,12ல் ஆடி அமாவாசை அன்று அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடுவர். ஆக.,16ல் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சுரேஷ் செய்து வருகிறார்.