சிவபெருமானுக்கு மஹா ருத்ராபிஷேகம்
ADDED :2 hours ago
ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங்கத்தில் சிவபெருமானுக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், பழச்சாறு உள்ளிட்ட திரவியங்களால் பக்தர்கள் மஹாருத்ர அபிஷேகம் செய்தனர்.
நேற்று காலை 9 மணிக்கு மஹா ருத்ராபிஷேக சங்கல்பத்தை சிவாச்சாரியர்கள் துவக்கினர். நாடு முழுக்க உள்ள, 27 புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை வேள்விச்சாலையில் பூஜித்து, அந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ருத்ரபாராயணமும் நடந்தது.
மாலை 6.30 மணிக்கு மகா அலங்காரமும், 7.00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. குடும்பத்துடன் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜெகன்னாத் டெக்ஸ்டைல்ஸ் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் நடந்தன.