மாவட்டந்தோறும் சோமவார பிரதோஷ வழிபாடு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ கால பூஜை நடந்தது. அதனையொட்டி, நேற்று மாலை ஞானாம்பிகை சமேத ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு பாலாபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, கோவிலின் உட்பிரகாரத்தில் பிரதோஷ கால சுவாமிகள் வலம் வந்தனர். இதில் திருத்தல இசை குழுவினர் இசையுடன், தேவார பஜனை பாடல்கள் பாடப்பட்டன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா வெற்றிவேல், பாலகிருஷ்ண சிவாச்சாரியார், அனந்தராமன் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம்: ஆதிவாலீஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு தொடங்கி மூலவர் ஆதிவாலீஸ்வரருக்கும், நந்திகேஸ்வரருக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மூலவர் மற்றும் நந்திகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். பஞ்சமாதேவி பசுபதிஸ்வரர் கோவிலில், மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர்: விஸ்வேஸ்வரர் கோவிலில், நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. வெள்ளி ரிஷப வாகனத்தில், உற்சவர் தம்பதி சமேதராக எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், அலகுமலை கயிலைநாதர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டர் கோவில் – காசி விஸ்வநாதர் சன்னதி ஆகிய கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது.
டி.பி.ஏ. காலனி காசி விஸ்வநாதர் கோவில், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், பூச்சக்காடு ராஜவிநாயகர் கோவில் காசி விஸ்வநாதர் சன்னதி, அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தீஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் நேற்று பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இவற்றில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
திண்டுக்கல்: அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை, காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம், காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
ஆர்.எம்.காலனி வி.ஐ.பி., நகர் குபரேலிங்கேஸ்வரர் கோயில், காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், கூட்டுறவு நகர் விநாயகர் கோயில், பழநி ரோடு பத்ரகாளியம்மன் கோயில், எம்.வி.எம்.,நகர் தென் திருப்பதி வெங்டாஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதி, நாகல்நகர் பாரதிபுரம் சாய்பாபா கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், அஷ்டோத்திர பூஜையுடன் மகா தீபாராதனை நடந்தது. சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், எரியோடு சாய்பாபா ஞானலாயம் உள்ளிட்ட கோயில்களில் சந்தனம், இளநீர், பன்னீர், பால், விபூதி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பழநி: பழநி முருகன் கோயிலில் கைலாசநாதர் சன்னதி, கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலையார் கோயில், அ.கலையம்புத்துார் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங் காரம், மகா தீபாரதனை நடந்தது.
விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயில், ஒட்டன்சத்திரம் ரத்தினகிரீஸ்வரர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருப்போரூர் பிரணவமலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆடி மாத சோமவார பிரதோஷமான நேற்று விமரிசையாக நடந்தது. பிரதோஷத்தையொட்டி, மாலை 6:00 மணியளவில், சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார். சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.
செங்கண்மால் கிராமத்தில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மாம்பாக்கத்தில் உள்ள தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
நெல்லிக்குப்பம்: பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ பூஜைகள் நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன் னீர், தேன், உட்பட 18 வகை யான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார்.பூலோகநாதர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.
கைலாசநாதர் நடனபாதேஸ்வரர் திருமானிக்குழி வாமனபுரீஸ்வரர் எய்தனுார் ஆதிபுரீஸ் வரர், மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.