உத்திரமேரூர் நாகாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை
ADDED :1 days ago
உத்திரமேரூர்: உத்திரமேரூர் நாகாத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி கூழ்வார்த்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. உத்திரமேரூர், எம்.ஜி.ஆர் நகரில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழா மூன்று நாட்கள் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டிற்கான விழாவில், கடந்த 9ம் தேதி மாலை 7:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு உத்திரமேரூர் முத்துபிள்ளையார் கோவிலிருந்து பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல், மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.