உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

நிலக்கோட்டை; அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.  ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று கோயிலில் திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சூரிய பகவானை வழிபட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்ச தீபம் ஏற்றி மூலவரை வழிபட்டனர். நிலக்கோட்டை டி.எஸ்.பி இளஞ்செழியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வைகை ஆறு வறண்டு காணப்படுவதால் தர்ப்பணம் செய்ய வந்தவர்கள் குளிக்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !