உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் சிவன் கோவிலில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சின்னசேலம் சிவன் கோவிலில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.


சிவன் கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு பஞ்சமியையொட்டி நேற்று காலை 27 வகையான அபிஷேகமும், வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. வழிபாடுகளை கணேசன் குருக்கள் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பட்டுபுடவை சார்த்தி, தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணி வரை சுவாமிக்கு சிறப்பு மகா யாகம், மிளகாய் யாகம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !