உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி விநாயகர் கோவில் திருப்பணிக்கு சிறப்பு பூஜை

புத்தேரி விநாயகர் கோவில் திருப்பணிக்கு சிறப்பு பூஜை

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், செல்வ விநாயகர் கோவில் திருப்பணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 


இதையொட்டி, நேற்று காலை மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, செல்வ விநாயகர் கோவில் திருப்பணிக்கு கணபதி ேஹாமம், வாஸ்து ேஹாமம், வாஸ்து தோஷம் நீங்க நவகிரக சாந்தி, மகாலட்சுமி ேஹாமம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமனோர் பங்கேற்றனர்.  பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !