திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு அஷ்டமி வழிபாடு
ADDED :12 hours ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் அஷ்டமியை முன்னிட்டு நேற்று யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று காலை 9:30 மணிக்கு அஷ்ட பைரவ மகாயாகம் ஹரிக்குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் துவங்கியது. பின்னர் யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் விபூதிக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த யோகபைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.