உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு தங்க கலசம் டி.வி.எஸ்., வேணு சீனிவாசன் காணிக்கை

ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு தங்க கலசம் டி.வி.எஸ்., வேணு சீனிவாசன் காணிக்கை

மாண்டியா: வரலாற்று பிரசித்தி பெற்ற, ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலுக்கு, டி.வி.எஸ்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன், தங்க அஷ்டலட்சுமி கலசத்தை, காணிக்கையாக செலுத்தினார்.

மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலுக்கு, டி.வி.எஸ்., நிறுவன நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன், நேற்று வந்தார். 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்க அஷ்டலட்சுமி கலசத்தை காணிக்கை செலுத்தினார். இது, 399 கிராம் எடை கொண்டது.

தங்க கலசத்தை மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவிலின் கர்ப்பக்கிரஹம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஸ்ரீரங்கநாதசுவாமி முன்னிலையில், கோவிலின் நிர்வாக அதிகாரி உமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் தலைமை அர்ச்சகர் விஜயசாரதி தலைமையில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

வேணு சீனிவாசன் கூறுகையில், ‘‘ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலுக்கு வந்து, தரிசிக்க வேண்டும் என்பது என் பல ஆண்டு விருப்பம்; ஆனால் வர முடியவில்லை. என் கனவில் ஸ்ரீரங்கநாத சுவாமி தோன்றியதால், இன்று கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்தேன். தங்க கலசம் அர்ப்பணித்தேன்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !