முத்து மாரியம்மன் கோயிலில் ஒன்பது லட்சம், கரன்சி நோட்டுகளால் அலங்காரம்
ADDED :12 hours ago
பழநி: பழநியில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ரயில்வே காலனி முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூ.ஒன்பது லட்சம் மதிப்பில் கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பழநியில் ரயில்வே காலனி முத்து மாரியம்மன் கோயிலில் நேற்று வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் சிறப்பு அபிஷேகம் நடந்தது அதன் பின் ரூ.ஒன்பது லட்சம் மதிப்பில் கரன்சி நோட்டுகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதன் பின் அன்னதானம் வழங்கப்பட்டது திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.